நியூயார்க்: ஐநா மன்றத்தில் செல்வாக்குமிக்க நாடுகளுக்கு மட்டும் உள்ள வீட்டோ அதிகாரங்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் வலியுறுத்தியுள்ளார். உலக அமைப்பில் இன்னமும் ஜனநாயகத்தை வழங்க மறுக்கும் அத்தகைய நாடுகள் மற்ற நாடுகளில் மாற்றங்களைச் செய்ய முயற்சி செய்யக் கூடாது என்றும் அவர் சொன்னார். ஐநாவில் பேசிய அவர், பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினர்களான சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் ஆதிக்கத்துக்கு முடிவு ஏற்பட வேண்டும் என்றார்.
ஐநாவில் வீட்டோ அதிகாரங்களை சீர்திருத்த மகாதீர் கோரிக்கை
1 mins read

