ஷிபுஷி: ஜப்பானின் தெற்கு தீவான ஒக்கினாவை நேற்று சக்திவாய்ந்த சூறாவளி தாக் கியதில் குறைந்தது 17 பேர் காயம் அடைந்தனர் என்று அந் நாட்டின் அதிகாரிகள் தெரிவித் தனர். இதே சூறாவளி வார இறுதியில் தாக்குதலை தொடரும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். ஞாயிறு அன்று டிராமி சூறா வளி அதிகபட்சமாக மணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று தாக்கியது. இதில் சாலையோர மரங்கள் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டின.
டிரக் வாகனத்தை புரட்டிப் போடும் அளவுக்கு சூறாவளி வலுவாக இருந்தது. வங்கிகளின் முகப்பில் இருந்த கண்ணாடி சன்னல்கள் உடைந்தன. இந்த நிலையில் ஓக்கினாவில் பாது காப்பை முன்னிட்டு சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் மின்சாரம் துண்டிக்கப் பட்டதால் 200,000 வீடுகள் பாதிக்கப்பட்டதாகவும் மேற்கு ஜப்பானில் குறைந்தது 386 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

