புயல் பயம்: மக்கள் வெளியேற உத்தரவு

புயல் பயம்: மக்கள் வெளியேற உத்தரவு

1 mins read
85e2285c-e196-4548-9f4d-c1257b38bdb0
-

மயாமி: அமெரிக்காவின் ஃபுளோரிடாவைப் புயல் தாக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனை அடுத்து, அந்த மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். புயல் காரணமாக வெள்ளம் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். "ஒவ்வொரு குடும்பமும் தயாராக இருக்க வேண்டும். உங்களது வீடுகள் அழிந்தால் அதை எங்களால் திரும்பவும் கட்டிக்கொடுக்க முடியும். ஆனால் உங்கள் உயிர் போனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது," என்று ஃபுளோரிடாவின் ஆளுநர் ரிக் ஸ்காட் தமது மாநில மக்களிடம் தெரிவித்தார்..PHOTO: AFP/NOAA/RAMMB