பண நிதியக் கூட்டத்துக்கான செலவைத் தற்காத்துப் பேசிய அதிபர் ஜோக்கோவி

பண நிதியக் கூட்டத்துக்கான செலவைத் தற்காத்துப் பேசிய அதிபர் ஜோக்கோவி

1 mins read
7f68d70b-b63f-4350-bfb4-53f7adb3f6ad
-

பாலி: பாலியில் நடைபெற்று வரும் அனைத்துலகப் பண நிதியம்= உலக வங்கி கூட்டத்துக்காக தமது அரசாங்கம் ஏற்றுக்கொண்ட செலவுகளைத் தற்காத்துப் பேசி உள்ளார் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ. அந்தக் கூட்டத்தை அதிபர் ஜோக்கோவியின் அரசாங்கம் ஆடம்பரமாக நடத்தி வருவ தாகவும் தேவையில்லாத செலவு களைச் செய்துள்ளதாகவும் அந் நாட்டின் எதிர்க்கட்சியினர் குறை கூறி வருகின்றனர். அண்மையில் சுலாவேசியை உலுக்கிய நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றின் காரணமாகப் பலர் மடிந்தனர்.

அந்தப் பெரும் பாதிப்பிலிருந்து இந்தோனீசியர்கள் மீள்வதற்குள் இந்தக் கூட்டத்தை ஜோக் கோவியின் அரசு நடத்தி இருக்கக் கூடாது என்று அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் திரு பிரபோவோ சுபியாந்தோவின் ஆதரவாளர்கள் சாடியிருந்தனர். கூட்டத்துக்காகப் பயன்படுத் தப்படும் பணத்தை சுலாவேசியிலும் லொம்போக்கிலும் நடத்தப்படும் மீட்புப் பணிக்கு ஒதுக்க அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.