அமெரிக்கா- சீனா வர்த்தகப் போரின் எதிரொலி: உலகத்தை வறுமை வாட்டக்கூடும்

அமெரிக்கா- சீனா வர்த்தகப் போரின் எதிரொலி: உலகத்தை வறுமை வாட்டக்கூடும்

1 mins read
dbed72e2-7e71-4013-b352-f0e2efb4d945
-
Google News Preferred Icon

பாலி: அமெரிக்காவுக்கும் சீனா வுக்கும் இடையிலான வர்த்தகப் போர், உலகத்தை மேலும் மோச மான வறுமை நிலைக்குத் தள்ளி விடும் சாத்தியம் இருப்பதாக அனைத்துலகப் பண நிதியம் எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்லாது, வர்த்தகப் போரால் உலகம் ஆபத்துமிக்க இடமாக மாறக்கூடும் என்று அது அக்கறை தெரிவித்தது. இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு ஆகியவற்றுக்கான அதன் உலகளாவிய பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை நிதியம் குறைத்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனா வுக்கும் இடையிலான வர்த்தகப் போரால் பொருளியல் மீண்டு வருவது பாதிக்கப்படும் என்று அது தெரிவித்தது.

கூடுதல் வர்த்தகத் தடைகள் உலகெங்கும் உள்ள குடும்பங் களையும் வர்த்தகங்களையும் பொருளியலையும் பாதிக்கும் என்று நிதியத்தின் தலைமைப் பொருளியல் நிபுணர் மௌரிஸ் ஒப்ஸ்ஃபெல்ட் கூறினார். "வர்த்தகக் கொள்கைகள் அரசியலைப் பிரதிபலிக்கின்றன. பல நாடுகளில் அரசியல் நிலை யின்மை நீடித்து வருகிறது. இதனால் மேலும் பல ஆபத்துகள் உருவாகும் சாத்தியம் இருக் கிறது," என்றார் அவர். அண்மையில், 60 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா புதிதாக வர்த்தக வரிகளை விதித்தது. வரி விதிக்கப்பட்ட பொருட்களில் திரவ நிலையில் உள்ள இயற்கை வாயுவும் அடங்கும். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு விசுவாசமாக இருக்கும் மாநிலங்களில் இந்தத் திரவ நிலையில் இருக்கும் இயற்கை வாயுகள் தயாரிக்கப் படுகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.

அனைத்துலகப் பணநிதியத்தின் தலைமைப் பொருளியல் நிபுணர் மௌரிஸ் ஒப்ஸ்ஃபெல்ட்PHOTO: AFP