மலேசியாவில் ஸாஹிட்டிடம் 3வது முறை விசாரணை

மலேசியாவில் ஸாஹிட்டிடம் 3வது முறை விசாரணை

1 mins read
36e77cb3-4583-46b4-86ee-8c8bb63d1cd0
-
Google News Preferred Icon

புத்ராஜெயா: மலேசியாவின் முன் னாள் துணைப் பிரதமர் டாக்டர் அஹமட் ஸாஹிட் ஹமிடி விசாரிக்கப்படும் தகவலை முன் கூட்டியே சில அதிகாரிகள் கசியவிட்டதை விசாரிக்க வேண் டியதில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரி வித்தது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் ஸாஹிட்டுக்கு சில நண்பர்கள் இருப்பதாகவும் அவர்களில் சிலர் அவருக்குத் தகவல் தெரிவித்திருக்கலாம் என்றும் அம்னோ உச்சமன்ற உறுப்பினரான லோக்மான் நூர் ஆடம் கூறியிருந்தார். இது, பலரை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனால் இதற்குப் பதிலளித்த ஆணையத்தின் தலைவர் ‌ஷுக்ரி அப்துல், "எங்கள் எல்லாருக்கும் நண்பர்கள் உள்ளனர். நண்பர் களுடன் பழகக்கூடாது என்று கூற முடியாது," என்றார். இதற்கிடையே ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத் துக்கு 3வது முறையாக வந்த ஸாஹிட்டிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அறநிறுவனத்தின் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தப் பட்டது தொடர்பில் அதிகாரிகள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.