அந்தரத்தில் தொங்கியபடி பற்றுறுதி எடுத்துக் கொண்ட கனடாவின் புதிய குடிமகன்கள்

அந்தரத்தில் தொங்கியபடி பற்றுறுதி எடுத்துக் கொண்ட கனடாவின் புதிய குடிமகன்கள்

1 mins read
aa6e6cae-0e49-4b60-af4d-3b7370117ea1
-

டொரோன்டோ: கனடாவில் உள்ள டொரோன்டோவில் 356 மீட்டர் உயரத்தில் தொங்கியபடி ஆறு புதிய குடிமகன்கள் நாட்டின் பற்று றுதியை எடுத்துக்கொண்டனர். புதிய குடிமகன்களுக்கு குடி நுழைவு துறை அமைச்சர் அஹமட் ஹுசேன் பற்றுறுதியை நடத்தி வைத்தார். ஆறு நாடுகளைச் சேர்ந்த ஆறு பேர் 'சிஎன்' டவரின் உச்சத்தில் 116 மாடி உயரத்தில் உள்ள 'எட்ஜ்வாக்' எனும் தொங்கு மேடையில் பற்றுறுதி எடுத்தனர் என்று கனடாவின் குடிநுழைவு, அகதிகள், குடியுரிமை பிரிவு தெரிவித்தது. பல இன கலாசாரத்தைப் போற்றிவரும் கனடா, 2017ஆம் ஆண்டில் மட்டும் 270,000 புதிய குடியேறிகளை ஏற்றுக்கொண் டது.

கனடாவின் குடியுரிமையைப் பெறும் கடைசி கட்டமாக பற்றுறுதி எடுத்துக்கொள்ளும் ஆறு பேர். படம்: ராய்ட்டர்ஸ்