மனநல நோய் அதிகரிப்பதால் $22 டிரில்லியன் இழப்பு ஏற்படும்

மனநல நோய் அதிகரிப்பதால் $22 டிரில்லியன் இழப்பு ஏற்படும்

1 mins read
e46e09d1-8efd-4f3e-8fcb-3c6b438b37cb
-

லண்டன்: உலக முழுவதும் ஒவ் வொரு நாட்டிலும் மனநலம் தொடர்பான பாதிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரு கிறது. இதனால் 2010க்கும் 2030க்கும் இடையே உலகப் பொருளியலில் 16 டிரில்லியன் டாலர் வரை அது இழப்பை ஏற்படுத்தும் என்று நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை எச்சரித்தது. மனோவியல் துறை, பொது சுகாதாரம், நரம்பியல் துறை மற்றும் மனநல நோய் சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த உலகின் 28 நிபுணர்கள் தயாரித்த லான்சட் ஆணைய அறிக்கையில் அதிகரித்துவரும் மனநலப் பிரச்சினையால் மக்கள், சமூகம், பொருளியல் எனப் பலவகையிலும் இழப்பு ஏற்படும் என்று கூறியது.

மருத்துவ பராமரிப்பு, மருந்துகள், உடற்பிடிப்பு சிகிச்சை உள்ளிட்ட இழப்பு நேரடிச் செலவுகளாக இருக்கும். ஆனால் இதனால் ஏற்படக் கூடிய மறைமுக செலவுகள் கூடு தலாக இருக்கும் என்று அறிக்கை தெரிவித்தது. உற்பத்தி குறைவு, சமூக நலத் திட்டங்கள், கல்வி, சட்ட ஒழுங்கு போன்றவற்றுக்கு மறைமுக இழப்புகள் ஏற்படும் என்று அறிக் கையின் ஆசிரியர்களில் ஒரு வரான விக்ரம் பட்டேல் சொன் னார். கடந்த 25 ஆண்டுகாலமாக உலக முழுவதும் மனநல நோயால் ஏற்படும் சுமை அதிகரித்துள்ளது.

மனநலம் தொடர்பான பாதிப்பு அதிகரிப்பதற்கு மூப்படையும் மக்கள் தொகையும் ஒரு காரணம் என்று அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்