கோலா திரங்கானு: மலேசியாவின் திரங்கானுவில் மற்றொரு பெண் ணுக்கு பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஷரியா நீதிமன்றத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு நான்கு பிரம்படிகள் தண்டனை யாக விதிக்கப்பட்டன. இருப்பினும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 45 வயது பெண்ணுக்கு 14 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கறிஞருடன் நீதிமன்றத் தில் முன்னிலையான பெண் ணுக்கு அடுத்த ஆறு மாதங்கள் மறுவாழ்வு இல்லத்தில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு 11.00 மணியளவில் புலாவ் டுயோங்கில் உள்ள ஓட் டலை அதிகாரிகள் அதிரடி சோதனையிட்டபோது ஓர் ஆட வருடன் அவர் பிடிபட்டார். அப்போது அதே அறையி லிருந்து ஆணுறை உள்ளிட்ட எட்டுப் பொருட்கள் கைப்பற்றப் பட்டன. கடந்த மாதம் பாலியல் சேவை வழங்கியதற்காக 30 வயது பெண்ணுக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனையும் ஆறு பிரம் படிகளும் விதிக்கப்பட்டன.
திரங்கானுவில் மற்றொரு பெண்ணுக்கு பிரம்படி
1 mins read
-

