துருக்கி: சவூதி உத்தரவிட்டதால் செய்தியாளர் கொல்லப்பட்டார்

துருக்கி: சவூதி உத்தரவிட்டதால் செய்தியாளர் கொல்லப்பட்டார்

1 mins read
3ff912d5-bfd6-47fb-9f06-78d5397c330f
-

அங்காரா: சவூதி தலைமையின் உத்தரவின்பேரில் துருக்கியில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தில் செய்தியாளர் கொல்லப்பட்டார் என்று துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர். சவூதி தூதரகத்துக்கு வந்த இரண்டு மணி நேரத்தில் சிக்கலான, அதிவிரைவான நடவடிக்கைளில் அதிருப்தியாளரான ஜமால் காஷோகி கொல்லப்பட்டார். இதற்காகவே கொண்டு வரப்பட்ட வாளால் அவரது உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டது என்று கூறிய அந்த மூத்த அதிகாரி, கதையில் வருவதுபோல சம்பவம் நடந்துள்ளது என்று குறிப்பிட்டார். ஆனால் இளவரசர் முஹமட் பின் சல்மான் உட்பட சவூதி அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

சவூதி அரேபியா தூதரகத்திலிருந்து சுதந்திரமாக செய்தியாளர் ஜமால் காஷோகி வெளியேறி விட்டார் என்று அவர்கள் உறுதிபடக்கூறினர். இந்நிலையில் துருக்கிய அதிபர் டாயூப் எர்டோகன், சவூதி அரேபியா தங்களுடைய வாதத்தை நிரூபிக்கும் ஆதாரங்களை வெளி யிட வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார். இதனால் சவூதி அரேபி யாவுக்கும் துருக்கிக்கும் இடையே உறவு பூசல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.