நுசா டுவா: பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந் தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, மழைக்காலம் வரு வதால் ஒன்று மற்றதற்கு எதிராக போட்டியிடுவதற்குப் பதிலாக ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயல்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார். பாலித் தீவில் நடைபெற்ற அனைத்துலக, உலக வங்கி ஆண்டுக் கூட்டத்தில் பேசிய அவர், "உலக பொருளியல் வளர்ச் சியில் சமநிலையின்மை காணப்படு கிறது," என்றார்.
"உலகின் மிகப்பெரிய பொரு ளியல் நாடான அமெரிக்கா சீரான விரிவாக்கத்தை அனுபவித்து வரு கிறது. அதே சமயத்தில் வர்த்தகப் பதற்றம், தொழில்நுட்பத்தால் தொழில்துறையில் ஏற்படும் இடை யூறுகள், சந்தையில் நிலவும் நெருக்கடி ஆகியவற்றைத் தாக்குப்பிடிக்க மற்ற நாடுகள் போராடி வருகின்றன," என்று திரு ஜோக் கோ கூறினார்.. மேலும் பேசிய அவர் மழைக் காலம் வருவதால் உலகில் பேரிடர் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்தார். இந்நிலையில் பரஸ்பர சக்தி களுடன் செயல்பட்டால் மழைக் கால பேரிடர்களைத் தவிர்க்க முடி யும். உலகமும் வெற்று நிலமாக மாறாது என்று அதிபர் ஜோக்கோ சொன்னார்.

