பாலி: அரசாங்கத்துக்குள் நடந்த சதியால் ஜோ லோ என அழைக்கப் படும் லோ டேக் ஜோவை கைது செய்ய முடியவில்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகமது குற்றம்சாட்டியிருக்கிறார். அரசாங்கத்திலிருந்து தகவல் கசிவதால் கைது நடவடிக்கையி லிருந்து அவர் நழுவி வருகிறார் என்றும் அவர் சொன்னார். "எங்கேயோ அவர் ஒளிந்து கொண்டிருக்கிறார்," என்று டாக்டர் மகாதீர் கூறினார்.
அரசாங்கத்துக்குள்ளாகவே தகவல்கள் கசியும் சதி வேலை நடக்கிறதா என்று கேட்டதற்கு அவர் பதிலளித்தார். "ஜோ லோவுக்கு சிலர் தகவல் தெரிவிக்கின்றனர் என்று சைனூ தீன் கூறியுள்ளார். ஒருமுறை ஹாங்காங்கில் அவர் இருந்தார். ஹாங்காங்குக்கு அதிகாரிகள் சென்றபோது அதற்குள்ளாகவே அவர் அங்கிருந்து பறந்துவிட் டார்," என்று பாலித் தீவில் நடந்த ஆசியான் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற மகாதீர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் தெரிவித் தார். அனைத்துலக நாணய நிதியம், உலக வங்கி ஆண்டுக் கூட்டத்தை யொட்டி பாலியில் ஆசியான் கூட் டம் நடைபெற்றது. 1எம்டிபி நிதி முறைகேடு தொடர்பில் தேடப்பட்டுவரும் ஜோ லோவை கைது செய்ய மலேசியா வுக்கு உதவுமாறு டாக்டர் மகாதீர் கேட்டுக்கொண்டார்.

