மன்டேலிங்: மேற்கு இந்தோனீ சியாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத் தில் குறைந்தது 22 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமையில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்ததால் வடக்கு சுமத்திராவிலுள்ள மன்டேலிங் மாவட்டத்தில் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற் பட்டன. இஸ்லாமிய பள்ளி ஒன்று நிலச் சரிவில் புதையுண்டதை அடுத்து, 22 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 10 பேரைக் காணவில்லை என் றனர் அதிகாரிகள். நிலச்சரிவு களால் மீட்புப் பணி முயற்சிகள் பாதிக்கப் பட்டதாகத் தெரிவிக்கப் பட்டு உள்ளது.
இந்தோனீசியாவில் இத்தகைய நிலச்சரிவுகளும் வெள்ளமும் ஏற் படுவது வழக்கம். பிப்ரவரியில், ஜாவா தீவின் மத்தியப் பகுதியில் சகதியும் கற்களும் மலை ஒன்றிலிருந்து சரிந்ததில் 12 பேர் மாண்டனர். இதற்கிடையே, ஐக்கிய நாட்டின் தலைமைச் செயலாளர் அண்டோனி யோ குட்டரெஸ், நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் உலுக்கப்பட்ட பாலு நகரத்தை நேற்று முன்தினம் பார்வையிட்டார். பாலி தீவில் நடந்துவரும் அனைத்துலக பண நிதியம், உலக வங்கி ஆகிய வற்றின் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தோனீசியாவுக்குச் சென்றிருக்கும் திரு குட்டரெஸ், மோசமாக பாதிக்கப்பட்ட இடங் களுக்குச் சென்றார்.
வடக்கு சுமத்திரா மாநிலத்திலுள்ள மன்டேலிங் மாவட்டதில் ஏற்பட்ட வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் பாதிக்கப்பட்ட சமய பள்ளி வளாகம் ஒன்று நிலைகுலைந்து காணப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

