காட்மாண்டு: நேப்பாளத்திலுள்ள குர்ஜா மலையில் ஏற்பட்ட பனிப் புயலில் சிக்கியிருந்த தென் கொரிய மலையேறிகள் அனை வரும் உயிர் இழந்ததாக அதி காரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைய ஆண்டுகளில் நடந்த ஆக மோசமான விபத்துகளில் இதுவும் ஒன்று எனத் தகவல்கள் கூறுகின்றன. நான்கு தென்கொரிய மலை யேறிகள், நேப்பாளத்தைச் சேர்ந்த நான்கு வழிகாட்டிகள் ஆகி யோரின் இறந்த உடல்களை மீட்புக் குழு ஒன்று நேற்று காலை கண்டுபிடித்தது. மீட்புப் பணி களுக்கு பலத்த காற்றும் கடுமை யான குளிரும் இடையூறாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஐந்தாவது தென்கொரிய மலையேறி ஒருவரும் இறந்ததாக நம்புவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் பாறை ஒன்றிலிருந்து விழுந்து மாண்ட தாக தென்கொரிய தூதரகம் தெரிவித்தது. மலையேறிகள் அமைத்திருந்த கூடாரங்களும் சேதமுற்றதை ஹெலிகாப்டர் வழியாக அங்கு சென்ற அதிகாரி ஒருவர் தெரி வித்தார். கடுமையான பனிப்பொழிவின் காரணமாக உயிரிழந்தோரின் உடல்கள் மீட்கப்பட முடியவில்லை என்று அவர் தெரிவித்தார். உலகின் ஆக உயரமான சிகரங்களில் 14 நேப்பாளத்தில் உள்ளன. நேப்பாளத்தில் மலையேறிகள் விபத்தில் மடியும் சம்பவங்களில் இது ஆக அண்மை யானது. 2015ஆம் ஆண்டில் எவரஸ்ட் மலையின் அடித்தளத்தில் இருந்த 18 பேர், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மாண்டனர். 2014இலும் இத்தகைய சம்பவத்தில் 16 பேர் பலியாயினர்.

