நிலச்சரிவு: 3 மியன்மார் நாட்டவர் மரண

நிலச்சரிவு: 3 மியன்மார் நாட்டவர் மரண

1 mins read
Google News Preferred Icon

ஈப்போ: கேமரன் ஹைலண்ட்ஸில் உள்ள வீடு ஒன்றில் இருந்த மியன்மார் நாட்டவர் மூவர் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் உயிருடன் புதையுண்டு உயிர் இழந்துள்ளனர். கனத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டபோது சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட அவர்களின் குடிசை வீடு இடிந்து அதில் அவர்கள் சிக்கியதாகக் கூறப்பட்டது. உயிரிழந்தவர்களில் ஒரு தம் பதியும் அவர்களின் நண்பரும் அடங்குவர். மூவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை மூன்று மணிக்குச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. போலிசாருக்கு காலை 10.40 மணியளவில் தகவல் கிடைத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் புதையுண்ட இருவரின் மாண்ட உடல்களை அவர்களின் நண்பர்கள் தோண்டி எடுத்து விட்டார்கள். பின்னர் மூன்றாவது உடலும் மீட்கப்பட்டது.