பாலி: உலகப் பொருளியலை ஆட்டம் காண வைக்கும் வர்த்தகப் பதற்றங்களுக்கு நாடுகள் ஒன் றிணைந்து ஆக்ககரமான ஒரு தீர்வைக் காணவேண்டும் என்று சீனாவின் மத்திய வங்கி ஆளுநர் யீ காங் கூறியுள்ளார். அமெரிக்காவுடன் நிலவி வரும் இறுக்கமான உறவை மேம்படுத்து வதில் சீனா தீவிரமாகக் கவனம் செலுத்தி வருவதாகவும் நேற்று நடைபெற்ற அனைத்துலக வங்கிப் பரிவர்த்தனைக் கருத்தரங்கில் அவர் தெரிவித்தார்.
யாருக்கும் வெற்றி அளிக்காத ஒரு சூழலுக்கு இவ்வர்த்தகப் பூசல் இட்டுச்செல்லும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார். தாம் பாலியில் கடந்த வாரம் சந்தித்த நாட்டுப் பிரதிநிதிகள், வர்த்தகப் பதற்ற நிலை தங்கள் நாட்டுப் பொருளியலில் எதிர்மறை யான தாக்கத்தை ஏற்படுத்தி உள் ளதைத் தெரிவித்ததையும் அவர் சுட்டினார். அதிகரித்து வரும் வர்த்தகப் பதற்றங்களுக்கு இடையில் சென்ற வாரம் உலக அனைத்துலக பண நிதியம் (ஐஎம்எஃப்) உலகளாவிய வளர்ச்சி கணிப்பு விகிதத்தை 3.7 விழுக் காடு குறைத்தது. இம்முடிவை ஆதரித்த திரு யீ, வர்த்தகப் பதற்றங்களால் எதிர் மறையான எதிர்பார்ப்புகளும் நிச் சயமற்ற நிலையும் ஏற்பட்டு சந்தை கள் உறுதியில்லாததாகின்றன என்றார்.

