பாலி: நிலநடுக்கத்தால் நிலை குலைந்து உள்ள இந்தோனீசியா வுக்கு இனி வரக்கூடிய பேரிடருக் குத் தயார் நிலையில் இருக்கவும் இதுவரை நிகழ்ந்ததிலிருந்து மீண்டு வரவும் உலக வங்கி நிறுவனம் $1 பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.37 பில்லியன்) நிதியை வழங்கவிருக்கிறது. இந்நிதி இந்தோனீசியாவின் மீளும்தன்மையை வலுப்படுத் துவதுடன் லொம்போக், மத்திய சுலாவேசி ஆகிய இடங்களில் நிவாரண, மறுசீரமைப்புப் பணி களுக்காகவும் பயன்படுத்தப்படும் என நேற்று வெளியிட்ட அறிக்கை வழி நிறுவனம் தெரிவித்தது. பேரிடர்கள் ஒன்றன்பின் ஒன் றாக வந்து உலுக்கி, பலரும் உயிர் இழந்து, இருப்பிடத்தை இழந்து உள்ள நிலையில் இது பேருதவியாக அமையும். இந்தோனீசிய அரசாங்கம் தேவைக்கு ஏற்பக் கோரும்போது அந்நிதியை உலக வங்கி நிறுவனம் வழங்கும் என்றும் தெரிவிக்கப் பட்டது.
இந்நிதியில் $5 மில்லியன் அமெரிக்க டாலர் நிவாரண, மறு சீரமைப்புப் பணிக்கான திட்ட மிடுதலுக்குத் தேவையான தொழில்நுட்பப் பணிக்கு ஒதுக்கப் படும். கண்காணிப்பு முறையை வலு வாக்குவது, எச்சரிக்கைகளை முன்கூட்டியே தெரிவிப்பது போன் றவற்றிற்காக எஞ்சிய நிதியைப் பயன்படுத்தலாம் என்று கூறப் பட்டது. அத்துடன் மருத்துவமனை, பள்ளி, சாலை, தண்ணீர் வழங்கல் முதலிய முக்கிய பொதுமக்கள் வசதிகளை உள்ளடக்கி அவசர நிலையிலிருந்து மீண்டு வரும் திட்டம் ஒன்றிற்காகவும் நிதி பயன்படுத்தப்படலாம். வேலைவாய்ப்பு, பொருளியல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆதரவு அளிப்பதுடன் 150,000 ஏழைக் குடும்பங்களுக்கும் பணம் அளிக்கப்படலாம் என்று ஆலோசனை கூறப்பட்டது.

