மேலாடை அணியாத படம்; சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்

1 mins read
9aabe288-bda4-44c6-9010-8fe73545f415
-

பெட்டாலிங் ஜெயா: மேலாடை இன்றி குளியல் தொட்டியில் தாம் அமர்ந்திருப்பதைக் காட்டும் படத்தை மலேசியாவின் இளையர், விளையாட்டு அமைச்சர் சையது சடிக் அப்துல் ரகுமான் (படம்) சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ததன் தொடர்பில் மலேசியர்களின் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். காற்பந்து விளையாட்டிற்குப் பிறகு குளிர் நீரில் தம் உடலைக் காட்டியவாறு அமைந்த அப்படத்தைக் கண்ட மக்கள், அமைச்சருக்கு இது அழகல்ல என்று கூறி வந்ததை அடுத்து 25 வயது திரு சையது சடிக் தம் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பக்கங்களிலிருந்து அப்படத்தை அகற்றிவிட்டார். இவர் மலேசியாவின் ஆக இளைய அமைச்சர். உடற்பயிற்சி, போட்டிக்குப் பின் விளையாட்டு வீரர்கள் இவ்வாறு குளிர் நீரில் இருப்பது வழக்கம்.