'புட்டின் அரசியல் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் அக்குற்றங்கள் அமெரிக்காவில் நிகழவில்லை'

'புட்டின் அரசியல் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் அக்குற்றங்கள் அமெரிக்காவில் நிகழவில்லை'

1 mins read

வா‌ஷிங்டன்: அரசியல் தொடர் பான படுகொலைகள், விஷம் வைத்துக் கொல்லும் சம்பவங் கள் ஆகியவற்றில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு பங்கு இருக்கலாம். ஆனால் அச்சம்பவங்கள் அமெரிக்காவில் நிகழாததால் அவற்றைத் தாம் பெரிதுபடுத்தவில்லை என்றார் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். 'சிக்ஸ்டி மினிட்ஸ்' என்ற நிகழ்ச்சிக்காகப் பேட்டியளித்த திரு டிரம்ப், அரசு குற்றங்களில் புட்டினின் பங்கு குறித்து பேசியபோது 'அவற்றில் அவர் ஈடுபட்டிருக்கலாம்' என்று கூறினார்.

போராட்டக்காரர்கள், செய் தியாளர்கள் எனத் திரு புட்டினுக்கு எதிராகச் செயல் பட்ட ரஷ்யர்கள் பலர் நஞ்சு ஊட்டப்பட்டு அல்லது மர்மமான சூழ்நிலைகளில் சிக்கி உயிரிழந் தார்கள். அண்மையில் முன் னாள் ரஷ்ய ஒற்றரான திரு செர்கி ஸ்கிரிபாலும் அவருடைய மகளும் பிரிட்டனில் ரஷ்ய அதிகாரிகளால் விஷம் வைத் துக் கொல்லப்பட்டனர். இருப்பினும், இத்தாக்குதலில் தனக்குச் சம்பந்தம் இல்லை என்று ரஷ்யா மறுத்து வருகிறது.