மலேசியாவில் வருமான இடைவெளி இரட்டிப்பு

மலேசியாவில் வருமான இடைவெளி இரட்டிப்பு

1 mins read

கோலாலம்பூர்: அதிகாரத்துவ வருமான இடைவெளி குறைந்திருப் பதாகக் கூறப்பட்டாலும், நாட்டின் அதிக வருமானம் ஈட்டும் முதல் 20 விழுக்காட்டினருக்கும் மற்றவர் களுக்கும் உள்ள வருமான இடை வெளி இருபது ஆண்டுகளில் இரட்டித்துள்ளதாக கஸானா ஆராய்ச்சிக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கைவழி தெரிவித்துள்ளது. இதன்வழி கூடுதல் மலேசியர்கள் ஏழ்மையில் இருப்பதாக அறியப்படுகிறது. வருமானத்தில் உள்ள வேறுபாட் டைக் குறித்தும் வருமான இடை வெளியைக் குறைப்பதற்கான நட வடிக்கைகள் குறித்தும் கொள்கை வகுப்போர் ஆலோசிக்க வேண்டும் என்றும் அறிக்கை கூறியுள்ளது.

உதாரணத்திற்கு, 2,000 ரிங்கிட் டுக்கும் (S$663) கீழ் மாதாந்திர வருமானம் பெறும் வீடுகளில், வருமானத்தில் 94.6 விழுக்காடு செலவுகளுக்குப் பயன்படுத்தப் படுவதாகவும் 15,000 ரிங்கிட்டுக்கு மேல் வருமானம் ஈட்டும் வீடுகளில், வருமானத்தின் 45 விழுக்காடு மட்டுமே செலவாவதாகவும் ஆய்வு நிறுவனம் சுட்டியது. கடந்த இருபது ஆண்டுகளில், வீட்டு வருமானத்தில் இருந்த வேறுபாடுகள் பணவீக்கத்திற்கு ஏற்ப மாறி, அதிக வருமானம் ஈட் டிய முதல் 20 விழுக்காட்டினருக்கும் நடுத்தர வருமானம் ஈட்டும் 40 விழுக்காட்டினருக்கும் குறைந்த வருமானம் ஈட்டும் 40 விழுக் காட்டினருக்கும் இடையே உள்ள இடைவெளி வெகுவாக அதி கரித்து இரட்டித்த நிலையில் உள் ளதாக ஆய்வு கூறியது.