மகாதீரின் 'கோணல் பாலம்' திட்டம் மீண்டும் பரிசீலனை

மகாதீரின் 'கோணல் பாலம்' திட்டம் மீண்டும் பரிசீலனை

1 mins read
fc7d967a-d3b3-4426-b81f-deae919cc168
-

கோலாலம்பூர்: மகாதீர் முகமது முன்பு பிரதமராக இருந்தபோது வெளியிட்ட ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான கோணல் பாலம் திட்டம் மீண்டும் பரிசீலிக்கப்படலாம் என்று ஜோகூர் மாநில முதல்வர் ஒஸ் மான் சப்பியான் நேற்று தெரிவித் தார். அதன் தொடர்பில் ஜோகூர் மாநில அரசாங்கமும் சிங்கப்பூரும் இம்மாதம் 27 அல்லது 28ஆம் தேதிகளில் சிங்கப்பூரில் கூட்டம் நடத்தலாம் என்றும் அதில் மலேசிய பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி பங் கேற்கக்கூடும் என்றும் திரு ஒஸ்மான் தெரிவித்தார்.

"அந்த கூட்டத்தில் தண்ணீர் விலை இரு தரப்பு மேம்பாடு மற்றும் முதலீடுகள் பற்றி விவாதிக்கவிருக்கிறோம். இதன் மூலம் சிங்கப்பூர் முதலீட்டாளர் களை மலேசியாவின் முதலீடு களுக்கு ஈர்க்க முயல்வோம். அதே நேரத்தில் 'கோணல் பாலம்' தொடர்பிலும் சிங்கப்பூருடன் கலந்து ஆலோசிப்போம். அது, இரு தரப்புக்கும் இடையிலான 3வது பாலமாகவும் அமையக் கூடும் என்று திரு ஒஸ்மான் நேற்று நாடாளுமன்றத்தில் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.

ஓவியரின் பார்வையில் மலேசியா முன்வைத்த 'கோணல் பாலம்' திட்டம். கோப்புப் படம்: கெர்பாங் பெர்டானா