சவூதி அரேபியாவுக்கு நெருக்கடி முற்றுகிறது

சவூதி அரேபியாவுக்கு நெருக்கடி முற்றுகிறது

2 mins read
5767928a-c857-4129-baed-d16a411d2fef
-

ரியாத்: பத்திரிகையாளர் ஜமால் காஷோகி காணாமல்போன விவ காரத்தில் சவூதி அரேபியாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அவருக்கு என்ன ஆனது என்பதை விளக்க வேண்டிய சூழ்நிலைக்கு சவூதி அரேபியா தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நட்பு நாடான அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ நேற்று சவூதி அரேபியாவில் மன் னர் சல்மானை நேரில் சந்தித்துப் பேசினார்.

சவூதி மன்னரை பொம்பியோ சந்தித்தபோது என்ன பேசினார் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. சென்ற திங்கட்கிழமை இதே விவகாரம் தொடர்பில் சவூதி மன்னருடன் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் பேசினார். இதன் தொடர்ச்சியாக மன் னரை பொம்பியோ சந்தித்துள்ளார். "சவூதி அரேபியா குடிமகனுக்கு என்னவாயிற்று என்பது பற்றி மன் னருக்கு தெரிந்ததைப் பற்றி அறிய இந்தச் சந்திப்பு நடைபெற்றது," என்று டுவிட்டர் தகவலில் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு டிரம்ப், "சவூதி அரேபியாவின் மறுப்பு உறுதியாக உள்ளது. இது, போக்கிரி கொலை காரர்களால் சம்பவம் நடந்திருக் கலாம் என்பதைக் காட்டுகிறது. யாருக்குத் தெரியும்," என்றார். சென்ற திங்கட்கிழமை சவூதி மன்னர் சல்மானும் காணாமல்போன பத்திரிகையாளர் பற்றி விசாரிக்க உத்தரவிட்டிருந்தார்.

இரு வாரங்களுக்கு முன்பு துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி அரேபியாவின் துணை தூதரகத்தில் நுழைந்த பத்திரி கையாளர் ஜமால் காஷோகி காணாமல் போனார்.

இஸ்தான்புல்லில் உள்ள சவூதி அரேபிய துணை தூதரகத்தில் பத்திரிகையாளர் காஷோகி மர்மமான முறையில் காணாமல்போனது குறித்து அறிய சவூதி அரேபியாவுக்கு வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பொம்பியோ, மன்னர் சல்மானைச் சந்தித்தார். சந்திப்பின் விவரம் வெளியிடப்படவில்லை. படம்: இபிஏ