ஜோகூர் போதைப்பொருள் ராணி கைது

ஜோகூர் போதைப்பொருள் ராணி கைது

2 mins read
075cfb2c-f419-41aa-8dbc-f09fdf51c4f5
-

ஜோகூர் பாரு: ஜோகூரில் பேர் போன கும்பலான 'கேங் 36' தலைவனுடன் இணைந்து போதைப்பொருளை அண்டை நாடுகளுக்குக் கடத்தியதன் தொடர்பில் இமெல்டா என்ற புனைபெயரில் அழைக்கப்படும் பெண் கைதாகியுள்ளார். நைஜீரிய போதைப்பொருள் கூட்டத்தில் சேர்ந்து, வியாபார நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு கிள்ளாங் வேலியில் பிடிபட்டு ஈராண்டுக்குத் தடுப் புச் சட்டத்தின்கீழ் நாடு கடத்தப்பட்டார். பின், நாட்டின் தெற்குப் பகுதியான ஜோகூரில் போதைப்பொருள் வியாபாரத்தை ஒரு கும்பல் தலைவனுடன் இணைந்து செயல்படுத்தத் தொடங்கினார். இந்தோனீசியா உள்பட பல அண்டை நாடுகளுக்கு ஹெராயின், கெட்டாமின் எனப் பலதரப்பட்ட போதைப்பொருள் வகைகளை இக்கும்பல் வழங்கி வந்தது.

வயது சுமார் முப்பதுகளில் உள்ள அப்பெண், கும்பல் தலைவனுடனும் மேலும் அக்கும் பலின் 13 உறுப்பினர்களுடனும் இம்மாதம் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவால் நடத்தப்பட்ட அடுக்கடுக்கான திடீர்ச் சோதனைகளில் பிடிபட்டார். அவர்களுடன் மூன்று மில்லியன் ரிங்கிட் (S$993,000) மதிப்புள்ள போதைப்பொருள், சொத்துகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் அளவு 85,000 புழங் கிகளின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியது. இதனை நேற்று முன்தினம் நடந்த செய்தியாளர் கூட்டத் தில் போதைப்பொருள் குற்ற விசாரணைப் பிரிவின் இயக்குநர் முகமது சலே தெரிவித்தார். சந்தேகத்தின் பேரில் கைதானோர் 26 வயதுக்கும் 39 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் விசாரணையின் தொடர்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

ஜோகூர் பாரு போலிஸ் தலைமை யகத்தில் அதிகாரி முகமது சலே கைப்பற்றப்பட்ட சொகுசு கார்களைப் பார்வை இடுகிறார். படம்: மலேசிய ஊடகம்