'முக்கிய பிரமுகர்களுக்கான சோதனைகள் கடுமையாக்கப்படும்'

'முக்கிய பிரமுகர்களுக்கான சோதனைகள் கடுமையாக்கப்படும்'

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் விமான நிலையங்களில் முக்கிய பிரமுகர்களுக்கான சோதனைகள் இனிக் கடுமையாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லொக் சியு ஃபூக் நேற்று அறிவித்தார். குடிநுழைவு, சுங்கச்சாவடிப் பிரிவுகளும் அச்சோதனைகளை அனைத்து முக்கிய பிரமுகர் தடங்களிலும் மேற்கொள்வதன்வழி இச்சலுகையைப் பலர் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம் என்றும் அவர் கூறினார். கோலாலம்பூரின் அனைத்துலக விமான நிலையத்தில் எல்லா முக்கிய பிரமுகர் தடங்களிலும் எக்ஸ்ரே இயந்திரங்கள் பொருத்தப்படும் என்றும் இதனால் கடத்தல் முயற்சிகள் முடக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.