சீனா ஏவுகணைச் சோதனை

சீனா ஏவுகணைச் சோதனை

1 mins read

`பெய்ஜிங்: சூப்பர்சோனிக் எச்டி1 என்ற ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் ஏவுகணைச் சோதனையை சீனா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. சீனாவின் குவாங்டோங் மாகாணம் குவாங்சூவில் உள்ள ஹோங்க்டா என்ற சுரங்க நிறுவனம் இச்சோதனையை நடத் தியது. அந்நிறுவனமே தனது சொந்த செலவில் இந்த ஏவுக ணையை உருவாக்கி உள்ளது. இது, இந்திய-ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவான 'பிரமோஸ்' ஏவுகணைக்குப் போட்டியாக கரு தப்படுகிறது. ஆனால், பிரமோஸ் ஏவுகணையைவிட இது விலை மலிவானது என்றும் பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்த ஏவுகணை விற்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.