மேலும் பல வளர்ச்சிக் திட்டங்கள்: மலேசியா

மேலும் பல வளர்ச்சிக் திட்டங்கள்: மலேசியா

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவில் அதி காரப் பகிர்வை நடைமுறைப்படுத் தும் வகையில் வரும் ஆண்டுகளில் 13 மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படவுள்ளது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் மலேசியாவில் அமைந்த புதிய பக்கத்தான் ஹரப்பான் கூட் டணியின் வளர்ச்சித் திட்டங்களில் இதுவும் ஒன்று. 2016 முதல் 2020ஆம் ஆண் டுக்கான ஐந்தாண்டுத் திட்டத்தின் மத்தியில் நடந்த பரிசீலனையின் போது இனிவரும் ஆண்டுகளுக் கான வளர்ச்சித் திட்டங்கள் பற்றி அரசாங்கம் விவரித்தது.

இது தொடர்பாக உரையாற்றிய பிரதமர் மகாதீர், "2018-2020ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் 4.5 முதல் 5.5 விழுக்காடு ஆண்டு பொருளாதார வளர்ச்சியை நோக்க மாகக் கொண்டுள்ளது," என்றார். இது முந்திய நஜிப் அரசாங்கத் தால் முன்னுரைக்கப்பட்ட 5 முதல் 6 விழுக்காடு வளர்ச்சி என்பதை விட சற்று குறைவானதாகும். பொதுப் போக்குவரத்து, விவ சாய மேம்பாடு, சுற்றுச்சூழல் பாது காப்பு உள்ளிட்டவற்றை நிர் வகிக்கும் அதிகாரம் 13 மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.