துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் பலி

துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் பலி

1 mins read

கெர்ச்: ரஷ்யாவுடன் இணைக்கப் பட்டுள்ள உக்ரேனின் கிரிமீயா தொழில்நுட்பக் கல்லூரியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். பதின்ம வயது ஆடவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து ரஷ்யா ஆராய்ந்து வருகிறது. இந்தத் தாக்குதலில் தனது உயிரையும் அந்த ஆடவர் மாய்த்துக் கொண்டதாக உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் தெரி விக்கின்றன. இச்சம்பவத்தில் பலியானவர்கள் பெரும்பாலும் மாணவர்கள் என்று கூறப்படு கிறது. தாக்குதல் குறித்துத் தகவல் அறிந்ததும் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர், அங்கிருந்த மாணவர் களையும் கல்லூரி ஊழியர்களை யும் பத்திரமாக அப்புறப்படுத்தினர்.