வாஷிங்டன்: அமெரிக்க பத்திரிகை யாளர் ஜமால் காஷோகி மாயமான விவகாரத்தில் சவூதி அரேபியா விற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், அமெரிக்காவுக்கு அந்நாடு 100 மில்லியன் அமெரிக்க டாலர் (S$137 மி.) அனுப்பியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது அமெரிக்காவைச் சமரசப் படுத்தும் சவூதி அரேபியாவின் முயற்சி என்று கூறப்பட்டாலும் வடகிழக்கு சிரியாவில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைக ளுக்காக இந்த நிதி வழங்கப் படுவதாக சவூதி அரேபியா தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் மாயமான விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, ரியாத் சென்றுள்ள நிலையில் இந்த பணம் அனுப்பப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையைக்°கிளப்பியுள் ளது. சவூதி பணம் அனுப்பியதற்கும் பொம்பியோ அங்குச் சென்றதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. சிரியாவை நிலைப்படுத்துவதற் காக சவூதி நிதி வழங்குவது நீண்ட காலமாக பேச்சுவார்த்தையில் இருந்து வந்த ஒன்று என்றும் அமைச்சு கூறியுள்ளது.
இதற்கும் பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று வெளியுறவு அமைச்சு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியைச் சேர்ந்த பெண் ணைப் பத்திரிக்கையாளர் ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலை யில், இரு வாரங்களுக்கு முன்னர் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய தூதரக அலுவ லகத்துக்குச் சென்றவர் மாயமா னார். இந்தச் சூழலில் இவ்வழக்குத் தொடர்பில் 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டு பத்திரிகை யாளர் ஜமாலை சவூதி அரேபியா தான் கொலை செய்திருக்கிறது என்று கூறியது. இதனைத் தொடர்ந்து, ஜமால் கொலை செய்யப்பட்டது உறுதியா னால் கடுமையான தண்டனை களுக்குச் சவூதி உள்ளாக்கப் படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.

