கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரும் தற் போதைய அம்னோ கட்சித் தலைவருமான அஹமட் ஸாஹிட் ஹமிடிமீது நேற்று நீதிமன்றத்தில் 45 குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டன. நம்பிக்கை மோசடி, அதிகாரத் தைத் தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பான அக்குற்றச்சாட்டு களில் சுமார் 114 மில்லியன் ரிங்கிட் (S$37.8 மி.) சம்பந்தப்பட் டிருப்பதாக நம்பப்படுகிறது. அனைத்து குற்றச்சாட்டு களையும் ஸாஹிட் மறுத்துள்ளார். பிணைத் தொகையாகத் தீர் மானிக்கப்பட்ட 2 மில்லியன் ரிங்கிட்டை இரு தவணைகளில் கட்டலாம் என்று கூறப்பட்டது.
அதன் தொடர்பில் நேற்று முதல் தவணைத்தொகையான ஒரு மில்லியன் ரிங்கிட்டை ஸாஹிட் கட்டிவிட்டார். இரண்டாவது தவணைத் தொகையை அவர் அக்டோபர் 26க்குள் கட்டவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அத்துடன் 65 வயது ஸாஹிட் தம் கடப்பிதழையும் ஒப்படைக்க ஆணையிடப்பட்டது. குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 409ன் கீழ் பத்து குற்றச் சாட்டுகள், ஊழல் தடுப்புச் சட்டத் தின்கீழ் எட்டு குற்றச்சாட்டுகள், கள்ளப்பணத்தை நல்ல பணமாக்கும் சட்டத்தின்கீழ் 27 குற்றச் சாட்டுகள் என மொத்தம் 45 குற்றச்சாட்டுகளை ஸாஹிட் எதிர்நோக்குகிறார். மலேசியாவை அம்னோ கட்சி ஆட்சி செய்த 61 ஆண்டுகளில், அதன் தலைவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவது இதுவே முதல் முறை. இது அக்கட்சிக்குப் பெரும் அடி என்று கூறப்படுகிறது.
நீதிமன்றத்திற்கு வெளியே காலையிலிருந்து காத்துக் கிடந்த அம்னோ கட்சி ஆதரவாளர்கள் கட்சியின் சிவப்பு நிறத்தில் உடை அணிந்திருந்தனர். படம்: பெர்னாமா

