ஜார்ஜ்டவுன்: பினாங்கு மாநிலத்தில் புக்கிட் குக்குஸ் பகுதியில் நேற்று நிகழ்ந்த நிலச்சரிவில் மூவர் உயிரிழந்ததாகவும் 12 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்த கட்டுமானத் தளத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான தற்காலிக வீடுகள் நிலச்சரிவில் சிக்கியதில் சிலர் வீடுகளுடன் புதையுண்டதாக கூறப்படுகிறது. தீயணைப்பு, மீட்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தேடி, மீட்கும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. வியாழக்கிழமையிலிருந்து விடாமல் பெய்து வரும் மழையால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி ஒரே சேறும் சகதியுமாக இருப்பதாக அறியப்படுகிறது.
பினாங்கு நிலச்சரிவில் மூவர் பலி; 12 பேரைக் காணவில்லை
1 mins read

