அங்காரா: அமெரிக்க செய்தியாளர் ஜமால் காஷோகி மாயமான விவகாரத்தில் அவர் அநேகமாக உயிருடன் இல்லை என்று நேற்று முன்தினம் அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார். காஷோகி கொல்லப்பட்டிருக்கும் சாத்தியம் குறித்து முதன்முதலில் டிரம்ப் இவ்வாறு கருத்து தெரிவித் துள்ளார். அமெரிக்க விமானப் படை விமானத்தில் ஏறுவதற்குமுன் திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்ததோடு இதனால் தாம் பெரிதும் வருந்துவதாகவும் கூறினார்.
காஷோகிக்கு என்ன நேர்ந்தது எனக் கண்டுபிடிப்பது ஒருபுறம் இருக்க, காஷோகி உயிருடன் இல்லை என்பது உறுதியானால் சவூதி அரேபியா மீது அமெரிக்கா எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்றும் திரு டிரம்ப் எச்சரித்தார். திரு காஷோகி இஸ்தான்புல்லில் உள்ள சவூதி அரேபிய தூதரகத் திற்குச் சென்று பின் வெளியே வராமல் மாயமான விவகாரம் உலகத்தின் கவனத்தையே பெரிதும் ஈர்த்துள்ளது. அதனைத் தொடர்ந்து துருக் கிய விசாரணை அதிகாரிகள் இரண்டாவது முறையாக தூதரகத் தில் சோதனை மேற்கொண்டனர். அத்துடன் அதிகாரிகள் தேடுதல் பணியை விரிவுபடுத்தி அருகிலுள்ள காடு, விவசாய நிலம் ஆகிய இடங்களிலும் தேடி வருகின்றனர்.

