பினாங்கு நிலச்சரிவு: நான்காவது சடலம் கண்டுபிடிப்பு; மூவர் காணவில்லை

பினாங்கு நிலச்சரிவு: நான்காவது சடலம் கண்டுபிடிப்பு; மூவர் காணவில்லை

1 mins read
Google News Preferred Icon

ஜார்ஜ்டவுன்: மலேசிய பினாங்கு மாநிலத்தில் புக்கிட் குக்குஸ் பகுதியின் கட்டுமானத் தளத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் நேற்று நான்காவது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. மோப்ப நாய்களின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட சடலம், மாண்ட 36 வயது இந்தோனீசிய ஆடவருடையது என அடையாளம் காணப்பட்டது. அப்பகுதியில் கிட்டத்தட்ட 24 மணிநேரம் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக நேற்று முன்தினம் பிற்பகலில் நிகழ்ந்த நிலச்சரிவில் மூவர் உயிரிழந்துவிட்டதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

காணாமல்போன மூவர் இடிபாடுகளில் சிக்கி புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை உயிரிழந்த நால்வரும் அந்தக் கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இந்தோனீசியா, பங்ளாதேஷ், மியன்மாரைச் சேர்ந்தவர்கள்.