ஆங் சான் சூச்சி சிறைவாசம் இருந்த வீடு விற்பனைக்கு விடப்படலாம்

ஆங் சான் சூச்சி சிறைவாசம் இருந்த வீடு விற்பனைக்கு விடப்படலாம்

1 mins read
Google News Preferred Icon

யங்கூன்: மியன்மார் அரசாங்க ஆலோசகரான ஆங் சான் சூச்சி ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு 15 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது குடும்பத்துக்குச் சொந்தமான அந்த வீடு யங்கூனில் இன்யா ஏரிக்கரையில் உள்ளது. இரண்டு அடுக்கு மாடியைக் கொண்ட அந்த வீடு தற்போது பழுதடைந்து இடிந்த நிலையில் உள்ளது.

அந்த வீட்டின் மீது திருவாட்டி ஆங் சான் சூச்சியின் அண்ணன் ஆங் சான் ஊ வழக்குத் தொடுத்துள்ளார். அதன் மீது தனக்கும் உரிமை உள்ளது என்றும் அதை ஏலக் குத்தகைக்குவிட்டு வரும் பணத்தில் தனக்குப் பங்கு தர வேண்டும் என்றும் அவர் மேல்முறையீடு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது அந்த வீடு 90 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலை போகும் என ஆங் சான் ஊவின் வழக்கறிஞர் மதிப்பிட்டுள்ளார்.