ஹாங்காங்: சீனாவையும் ஹாங்காங்கையும் இணைக்கும் உலகின் ஆக நீளமான கடல் பாலம் இம்மாதம் 24ஆம் தேதி போக்குவரத்துக்காக திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனா=ஹாங்காங் இடையே போக்குவரத்தை எளிமைப்படுத்தும் விதமாக ஹாங்காங்=ஸுகாய்=மக்காவ் பாலம் திறக்கப்படவிருக்கிறது. 55 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இது உலகின் நீளமான பாலமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் ஹாங்காங்= ஸுகாய் இடையேயான பயண நேரம் 3 மணி நேரத்திலிருந்து வெறும் 30 நிமிடங்களாகக் குறைகிறது.
அத்துடன், ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்ல நேரடி வசதியையும் இந்தக் கடற்பாலம் வழங்கும். பல மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்தப் பாலத்திற்கான கட்டுமானப் பணிகள் 2009ஆம் ஆண்டில் தொடங்கின. தினந்தோறும் சுமார் 29,100 வாகனங்கள் இந்தக் கடல் பாலத்தைக் கடக்கும் என 2016ஆம் ஆண்டில் சீன அரசாங்கம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.