பேங்காக்: பணியில் இல்லாத விமானிகளுக்காக இருக்கை களை விட்டுக்கொடுக்க இரு பயணிகள் கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவத் திற்கு, அந்தப் பயணி களிடம் 'தாய் ஏர்வேஸ்' விமான நிறுவ னத்தின் தலைவர் மன் னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார். இம்மாதம் 11ஆம் தேதி சுவிட் சர்லாந்தின் ஸ`ரிக்கிலிருந்து தாய்லாந்தின் பேங்காக்கிற்குப் புறப்படவிருந்த விமானத்தில் பணியில் இல்லாத இரண்டு விமா னிகளுக்கு இடம் வழங்க வேண்டிஇ ருந்தது.
அவர்களுக்கு முதல் வகுப்பு பிரிவில் இருக்கைகளை வழங்கும் நோக்கில், அப்பிரிவில் பயணச் சீட்டுகளை வாங்கியிருந்த இரு வரை அவர்களின் இருக்கைகளை விட்டுக்கொடுக்குமாறு விமானச் சிப்பந்திகள் வற்புறுத்தி இருந்தனர். அவ்வாறு விட்டுக்கொடுக்காவிட்டால் விமானம் புறப்படாது எனப் பணியில் இருந்த விமா னிகள் மிரட்டியும் இருந்தனர்.

