ஜகார்த்தாவில் பொதுப் பேருந்துகளுக்குப் பதிலாக 'டிராம்'

ஜகார்த்தாவில் பொதுப் பேருந்துகளுக்குப் பதிலாக 'டிராம்'

1 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியத் தலை நகர் ஜகார்த்தாவில் பயணிகளின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்திசெய்ய அந்நகர போக்கு வரத்து அமைப்பு, பொதுப் பேருந்து களுக்குப் பதிலாக 'டிராம்' வண்டி களைப் பயன்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருகிறது. 'டிரான்ஸ்ஜகார்த்தா' பேருந்து ஒன்றில் டசன் கணக்கான மக்க ளுக்கான இடவசதி மட்டுமே உள்ளது. மாறாக, ஏழு பெட்டிகள் கொண்ட 'டிராம்' வண்டியில் கிட்டத்தட்ட 700 பேர் வரை பயணம் செல்ல முடியும்.

இதனால் ஜகார்த்தாவில் நெடுங்காலமாக நிலவும் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 'டிராம்' போக்குவரத்து முறை பெரிதும் உதவும் என போக்குவரத்து அமைப்பான 'கிரேட்டர் ஜகார்த்தா டிரான்ஸ்போர்ட்டேஷன் ஏஜென்சி' (பிபிடிஜே) நம்புகிறது. 2019 முதல் 2029ஆம் ஆண்டு வரையிலான 'கிரேட்டர் ஜகார்த்தா டிரான்ஸ்போர்ட்டேஷன்' முறையின் பெருந்திட்டத்தின்கீழ் இந்த 'டிராம்' வண்டிகள் உருவாக்கப் படும் எனத் தெரிவிக்கப்பட்டது.