காபூல்: ஆப்கானிஸ்தானில் நேற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில் தலைநகர் காபூல் உள் ளிட்ட சில பகுதிகளில் வாக்குச் சாவடி களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காபூலில் உள்ள சில பள்ளிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பீதியடைந்த வாக்கா ளர்கள் உயிருக்குப் பயந்து அங்கிரு ந்து ஓட்டம் பிடித்தனர்.
இதேபோல் நாட்டின் பிற பகுதி களிலும் வாக்குச்சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக் குதல் நடத்தி வருவதாகவும் இதில் பலர் உயிரிழந்ததாகவும் ஏராளமானோர் காயமடைந்ததா கவும் ஆப்கானிஸ்தான் ஊடக ங்கள் செய்தி வெளியிட்டு வரு கின்றன. 249 உறுப்பினர்களைக் கொண்ட ஆப்கானிஸ்தான் நாடா ளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. 2,500க்கும் அதிக மான வேட்பா ளர்கள் பொருதும் இந்தத் தேர்த லில் கிட்டத்தட்ட 8.9 மில்லியன் பேர் வாக்களிக்கவுள் ளனர். சுமார் 5,000 வாக்குச்சா வடிகள் அமைக்க ப்பட்டுள்ளன. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என எச்சரித்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், நாட்டின் பல பகுதிகளில் வன் முறை வெறியாட்டங்களில் ஈடுப ட்டு வருகின்றனர்.

