மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது, பிரதமர் பதவியிலிருந்து இன்றே விலகிவிட தான் தயார் என்று டாக்சி ஓட்டுநர்களிடம் காட்டமாக தெரிவித்து இருக்கிறார். டாக்டர் மகாதீர் லங்காவியில் நேற்று டாக்சி ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மலேசியாவில் கிராப் டாக்சி சேவைக்கு முன்னுரிமை அளிக்கப் படுவதாக அந்த டாக்சி ஓட்டு நர்கள் புகார் தெரிவித்தனர். அதன் தொடர்பில் பேச்சுவார்த்தை நடந்தது. டாக்டர் மகாதீருக்கும் டாக்சி ஓட்டுநர்கள் சங்க உறுப் பினர்களுக்கும் இடையில் நடந்த அந்தச் சந்திப்பு, ஒரே கூச்சல் குழப்பமாகிவிட்டது. சில டாக்சி ஓட்டுநர்கள் சத்தம் போட்டுவிட்டு பேச்சு நடந்த அறையை விட்டு வெளியேறிவிட்ட தாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அவர்களிடம் பேசிய பிரதமர் டாக்டர் மகாதீர், "நான் உதவமுடியும் என்று நீங்கள் நம்ப வில்லை என்றால் நீங்களே உதவிக்கொள்ளுங்கள். "பிறகு என்ன நிகழும் என்பதை பாருங்கள். நான் உங்களுக்கு உதவ விரும்புகிறேன். அதேவேளை யில், நீங்கள் எனக்கு உதவவில்லை என்றால் நான் உங்களுக்கு உதவ முடியாது," என்று டாக்டர் மகாதீர் டாக்சி ஓட்டுநர்களிடம் தெரிவித் தார். "பிரதமராக இருக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை.
நான் முன்பே ஓய்வுபெற்றுவிட் டேன். ஆனால் மக்கள் மறுபடியும் என்னை அழைத்தார்கள். அத னால்தான் நான் வந்தேன். நான் பிரதமர் பதவியில் இருப்பது உங் களுக்குப் பிடிக்கவில்லை என்றால் இன்றே விலகிவிட என்னால் முடியும். எனக்கு எந்தப் பிரச்சினை யும் இல்லை," என்று மகாதீர் அவர்களிடம் கூறினார். அதனையடுத்து கொஞ்சம் அமைதி திரும்பியது. தொடர்ந்து டாக்சி ஓட்டுநர்களிடம் பேசிய பிரதமர், டாக்சி ஓட்டுநர்களுக்கு உதவவே தான் முயற்சி செய்து வருவதாகக் குறிப்பிட்டார். அந்தப் பேச்சுவார்த்தையில் லங்காவி டாக்சி ஓட்டுநர்கள் சுமார் 200 பேர் கலந்துகொண்டார்கள்.
மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது நேற்று லங்காவியில் சுமார் 200 டாக்சி ஓட்டுநர்களுடன் பேச்சு நடத்தினார். அந்தப் பேச்சு வார்த்தை கூச்சல் குழப்பமாகிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது. படம்: பெர்னாமா

