வாஷிங்டன்: பத்திரிகையாளர் ஜமால் காஷோகி மரணமடைந்த சம்பவம் தொடர்பில் சவூதி அரேபியா அளித்துள்ள விளக்கம் தமக்கு திருப்தியளிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். காணாமல் போயிருந்த பத்திரிகையாளர் காஷோகி இஸ்தான் புல்லில் உள்ள சவூதி துணைத் தூதரகத்தில் ஏற்பட்ட கைகலப்பில் கொல்லப்பட்டது உண்மைதான் என்று முதல்முறையாக வெள்ளிக் கிழமை அன்று சவூதி அரேபியா ஒப்புக்கொண்டது. ஆனால் சவூதி அரேபியாவின் விளக்கம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சவூதி அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்துவந்த பத்திரிகையாளர் காஷோகி கொல்லப்பட்டு உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப் பட்டது என்று துருக்கிய அதி காரிகள் நம்புகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத் தில் விடை கிடைக்கும் வரை எனக்கு திருப்தியிருக்காது என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். "சவூதி அரேபியா மீது தடைகள் விதிக்கும் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் அது அந்த நாட்டைப் பாதிப்பதற்குப் பதிலாக எங்கள் நாட்டையே அதிகம் பாதிக் கும்," என்று திரு டிரம்ப் சொன் னார். சவூதி பட்டத்து இளவரசர் சல்மானுக்கு பத்திரிகையாளர் கொல்லப்பட்டது பற்றி தெரியாமல் இருக்கவும் சாத்தியமிருக்கிறது என்றார் அவர். சென்ற வெள்ளிக்கிழமை வரை காஷோகி இருக்கும் இடம் தெரிய வில்லை. தூதரகத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார் என்றே சவூதி தொடர்ந்து கூறிவந்தது. இந்தச் சூழ்நிலையில் காஷோகி எப்படி கொல்லப்பட்டார் என்பது பற்றிய அனைத்து விவரங்களையும் வெளியிடுவோம் என்று துருக்கி சூளுரைத்தது. காஷோகியை சவூதி முகவர் குழு கொன்றதைக் காட்டும் ஒளி, ஒலி ஆதாரங்களை வெளியிடப் போவதாகவும் துருக்கி விசாரணை யாளர்கள் கூறியிருந்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

