ரஷ்யாவுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகும்: அதிபர் டிரம்ப்

1 mins read

வா‌ஷிங்டன்: ரஷ்யாவுடன் போடப்பட்ட வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உறுதியுடன் கூறியுள் ளார். செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், "1987ஆம் ஆண்டின் நடுத்தர தொலைவு ஏவுகணை ஒப்பந்தத்தை ரஷ்யா மீறியிருக்கிறது," என்றார். ஐநூறு முதல் 5,500 மைல் தொலைவு வரை பாயும் ஆற்றல் கொண்ட ஏவுகணைகள் தயாரிப்பதை ஒப்பந்தம் தடை செய்கிறது. இந்நிலையில் பேசிய அதிபர் டிரம்ப், "ரஷ்யாவை ஏவுகணைகளைத் தயாரிக்க அனுமதிக்க மாட் டோம்," என்று தெரிவித்தார். இது குறித்து முன்னைய அதிபர் ஒபாமா ஏன் பேசவில்லை அல்லது ஒப்பந்தத்திலிருந்து விலகவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பினார். கடந்த 2014ஆம் ஆண்டில் தரையிலிருந்து ஆகாயத் துக்குப் பாயும் ஏவுகணைகளை ரஷ்யா சோதித்திருப்பதாக தகவல் வெளியானதால் ரஷ்யா ஒப்பந்தத்தை மீறியிருப்பதாக ஒபாமா குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் ஐரோப்பிய தலைவர்களின் நெருக்குதலால் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதை ஒபாமா அப்போது தவிர்த்து விட்டார் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். இதற்கிடையே அணுவாயுத ஒப்பந்தத்தை தான் மீறியிருப்பதாகக் கூறப்படு வதை ரஷ்யா வன்மையாக மறுத்துள்ளது.