சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஏற்கெனவே சிக்கல் மேல் சிக்கலைச் சந்தித்துவரும் ஆளும் பழமைவாத கூட்டணி, முக்கிய இடைத்தேர்தலில் தோல்வியைத் தழுவியுள் ளது. இதனால் அந்தக் கூட்டணி பெரும் பான்மையை இழந்துள்ளது. ஆனால் ஆளும் லிபரல்-தேசிய கூட்டணி முழு தவணைக்கும் ஆட்சியி லிருக்கும் என்று புதிய பிரதமரான ஸ்காட் மோரிசன் சூளுரைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் லிபரல் கட்சிக்குள்ளாகவே நடைபெற்ற சூழ்ச்சியில் முன்னைய பிரதமர் மால்கம் டர்ன்புல் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். அப்போது நடந்த கட்சித் தேர்தல் ஸ்காட் மோரிசனுக்கு சாதகமாக முடிந்தது. அதனைத் தொடர்ந்து ஸ்காட் மோரிசன் பிரதமரானார். ஆளும் கூட்டணி ஒரே ஒரு நாடாளு மன்ற இடத்தை அதிகம் பெற்று ஆட்சியில் நீடித்து வந்தது.
இந்நிலையில் வென்ட்வோர்த் இடைத் தேர்தலில் தோல்வியடைந்ததால் அந்த ஒரே ஒரு கூடுதலான பெரும்பான்மையை ஆளும் கூட்டணி இழந்துள்ளது. வென்ட்வோர்த்தில் பதிவான வாக்குகளில் சுயேச்சை வேட்பாளரான கெரின் பெல்ப்ஸ் ஏறக்குறைய 54.34 விழுக்காடு வாக்குகளைக் கைப்பற்றி முன் னணியில் இருப்பதாக ஆஸ்திரேலிய தேர் தல் ஆணையம் அறிவித்துள்ளது. லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டேவ் ஷர்மாவுக்கு 45.66 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடர்ந்ததில் கெரின் பெல்ப்சுக்கு வாக்குகள் 50.61 விழுக் காட்டுக்குக் குறைந்தது அல்லது 884 வாக்குகளையே அவர் அதிகம் பெற்றார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஸ்காட் மோரிசான், "முழு தவணைக்கும் அரசு சேவையாற்ற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். அதற்காகவே மக்கள் தேர்ந் தெடுத்துள்ளனர். அதையே நாங்கள் செய்ய விரும்புகிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.

