அன்வார்: சீன மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள்

அன்வார்: சீன மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள்

1 mins read

நிலாய்: கெஅடிலான் ராக்யாட் கட்சியின் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராஹிம், மலாய் குழந்தைகள் சீன மொழியிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளார். தற்போது சீன மொழி வட்டார பொருளியல் மொழியாகத் திகழ் கிறது என்றார் அவர். "மலாய் அல்லாத மற்ற மொழிகளைக் கற்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய நடைமுறை. ஆனால் அதே சமயத்தில் தேசிய மொழி என்ற நிலையிலிருந்து மலாய் மொழி விலகி விடக் கூடாது," என்று நேற்று அவர் வலியுறுத்தினார். "தேசிய மொழியாக மலாய் மொழி தொடர்ந்து நீடிப்பதற்கு கேள்வி எழாத வரையில் மற்ற மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆதரவு வழங்கப்படலாம். இதன் படி இவ்வட்டாரத்தில் வர்த்தக மொழியாகத் திகழும் சீன மொழியை மலாய் இளையர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என யோசனை தெரிவிக்கிறேன்," என்று அவர் கூறியதாக மலே சியாகினி செய்தி தெரிவித்தது. மலேசிய முஸ்லிம் இளையர் இயக்கத்தின் 47வது ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்று அன்வார் பேசினார்.