தைப்பே: தைவானில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் நிகழ்ந்த ஆக மோசமான ரயில் விபத்தில் உயிர் பிழைத்தோரை மீட்பு பணியாளர்கள் இரவு பகலாக தேடி வந்தனர். ரயில் தடம் புரண்டதில் ஐந்து பெட்டிகள் கவிழ்ந்தன. ஆனால், இவற்றில் நான்கு பெட்டி களில்தான் உயிர்ச் சேதம் ஆக அதிகமாக உள்ளதாக மீட்பு பணி யாளர்கள் கூறினர். தலைநகர் தைப்பே அருகே உள்ள வடகிழக்கு மாவட்டமான யிலானில் நேற்று முன்தினம் மாலை 4.50 மணியளவில் விரைவு ரயில் சேவையான 'புயுமா எக்ஸ்பிரஸ் 6432' தடம் புரண் டதில் அதிலிருந்த எட்டுப் பெட்டி களும் தண்டவாளத்திலி ருந்து விலகி ஓடின. ஆறாவது ரயில் பெட்டிக்கு அருகே பல சடலங்களை மீட்பு பணியாளர்கள் கண்டுபிடித்ததாக உள்ளூர் சீன நாளிதழ் ஒன்று தெரிவித்தது. சில பயணிகள் பெட்டிகளிலிருந்து தூக்கி வீசப்ப ட் டனர்.
இந்த விபத்தில் கவிழ்ந்திடாத நான்கு ரயில் பெட்டிகளிலேயே உயிர்ப் பிழைத்தவர்களில் பெரும் பாலானோர் இருந்தனர். ரயிலில் மொத்தம் 366 பயணிகள் இருந்த னர். நேற்று முன்தினம் இரவு 9.35 மணி நிலவரப்படி, உயிர்ப் பிழைத்த பயணிகள் அனைவரும் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட தாகவும் சடலங்கள் இடிபாடுகளிலி ருந்து நீக்கப்பட்டதாகவும் தைவான் ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. இந்த விபத்தில் குறைந்தது 18 பயணிகள் உயிரிழந்தனர். 187 பேர் காயமடைந்தனர். உயிரி ழந்த வர் களில் 15 பேர் முதல் மூன்று ரயில் பெட்டிகளில் இருந் தனர். உயிரிழந்தவர்களில் ஆக இளைய வருக்கு ஒன்பது வயது.
எட்டு பெட்டிகள் கொண்ட ரயில் நேற்று முன்தினம் தடம் புரண்டது. படம்: ஏஎஃப்பி

