லங்காவி: பக்கத்தான் ஹரப் பான் அரசாங்கத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச் சர்கள், மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதின் பார்வையில் 40 முதல் 50 விழுக்காடு வரை மட்டுமே மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். மலேசிய அஸ்ட்ரோ அவானி தொலைக்காட்சியில் ஒளியே றிய பிரத்தியேக பேட்டி ஒன்றில், அமைச்சரவையின் செயல் திறனை மதிப்பிடச் சொன்னத ற்கு டாக்டர் மகாதீர் இந்த மதிப்பெண்களைக் கொடுத்தார். அரசியல் அனுபவம் போதாத குறிப்பிட்ட சில அமைச்சர் களின் கண்ணோட் டத் தையும் மனப்பக்குவத்தையும் மாற்றுவது எளிதான காரியம் அல்ல என்பதை அவர் ஒப்புக் கொண்டார். இதற்கு முன்னர் அரசாங்க தலைமைத்துவப் பதவி வகிக்காதவர்கள் அவர் களில் அடங்குவர். இருப்பினும், பெரும்பாலான அமைச்சர்கள் நன்கு சமாளிப்பதாகவும் தங்களது செயல்திறனை மேம்படுத்த, தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்களை விரைவாக கற்றுக்கொள்வதாகவும் டாக்டர் மகாதீர் சொன்னார்.
இதற்கிடையே, அரசாங் கத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு முன்பு பரவலாக நிலவிய ஊழல் இப்போது கட்டுப்படுத்தப்பட்டு இருப் ப தாக அவர் கூறினார். இப்போதெல்லாம் மக்கள் ஊழல் பற்றிப் பேசுவதே இல்லை என்றார் டாக்டர் மகாதீர். ஏனென்றால், ஏதோ ஒரு காரணத்துக்காக அரசாங் கத்தை அணுகும் பொதும க்க ளும் நிறுவனங்களும் வணி கர்களும் ஊழல் பற்றிய அச்சமி ன்றிப் பேச்சு நடத்த முடிகிறது. "இப்போது நிறுவனங்களும் வர்த்தகர்களும் அரசாங்கத்தில் ஊழல் நிலவுவதாகப் பேசுவ தையோ புகார் செய்வதையோ நாம் கேட்க முடிவதில்லை. வெளிநாடு சென்றால்கூட அங்கும் யாரும் அது பற்றிக் குறிப்பிடுவதில்லை. "இதற்கெல்லாம் காரணம், நாங்கள் ஆட்சிக்கு வந்தபோதே ஊழலையும் கட்டுப்படுத்தி விட்டோம்", என்றார் டாக்டர் மகாதீர்.

