டோஹா: கத்தாரில் ஓராண்டு பெய்ய வேண்டிய மழையின் அளவு கடந்த சனிக்கிழமையன்று, ஒரேநாளில் கொட்டித் தீர்த்தது. இதனால், தலைநகர் டோஹா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. பாலைவன நாடான கத்தாரில் அன்று திடீரென்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ச்சியாக பெய்த கனமழையால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுரங்கப் பாதைகளில் வெள்ளநீர் தேங்கியதுடன், வீடுகளுக்குள் நீர் புகுந்தது. விமானப் போக்குவரத்தும்கூடப் பாதிக்கப்பட்டது. பொதுவாக வெயில் வாட்டியெடுக்கும் கத்தாரில் இதுபோன்ற மழையை இதற்குமுன் பார்த்தது இல்லை என்று அந்நாட்டு மக்கள் கூறினர். திடீரென பெய்த மழை இந்த அளவுக்குப் பெருமழையாக ஒரேநாளில் இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கத்தாரில் ஓராண்டு பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது
1 mins read

