ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட்: சிறுவர்களைப் பாதுகாக்க தவறிவிட்டேன்

1 mins read

கேன்பெரா: பள்ளிகளிலும் தேவாலயங்களிலும் சிறுவர் களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள், கொடுமை களிலிருந்து ஆயிரக்கணக்கா னோரைத் தாம் பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் சிறுவர் களின் குரலைக் கேட்கத் தவறிவி ட்டதாகவும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிசன் உருக்கமாகக் கூறி கண்ணீர் விட்டு அந்நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கோரியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பள்ளி கள், தங்குமிடங்கள், ஆதரவற்றோ ர் இல்லங்கள், தேவால யங்கள் போன்றவற்றில் சிறுவர்களுக்குப் பாலியல் சித்ரவதைகள், துன்புறுத்தல்கள் நடக்கின்றன. பாலியல் ரீதி யாகச் துன்புறுத் தப்படுவதாக எழுந்தப் புகார் குறித்து விசாரிக்க 'ராயஸ் கமிஷன்' உருவாக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசார ணையின் அறிக் கை கடந்த சில மாதங்களுக்கு முன் அர சிடம் சமர்ப்பிக்கப்ப ட்டது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களையும் சந்தித்து வந்து உள்ளதாக அந்த அறிக்கை சுட்டியது. இச்சூழலில் திரு மோரிசன் நாட்டு மக்களுக்கு உரையாற்றி அவர்களிடம் பொது மன்னிப்பு கோரினார்.