காஷோகி விவகாரம்: உண்மை வெளியிடப்படும்: துருக்கி

காஷோகி விவகாரம்: உண்மை வெளியிடப்படும்: துருக்கி

2 mins read

இஸ்தான்புல்: துருக்கி, இஸ்தான் புல் நகரில் உள்ள சவூதி துணை தூதர கத்தில் செய்தியாளர் ஜமால் காஷோகி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் துருக்கி அதிகாரிகள் அண்மைய காலமாக பயங்கரமான விவரங் களை வெளி யிட்டு வந்துள்ளனர். இந்நிலையில், காஷோகியின் மரணம் குறித்த முழு உண்மையும் வெளியிடப்படும் என்று துருக்கி அதிபர் ரெஜிப் தய்யிப் எர்துவான் உறுதி தெரிவித்திருக்கிறார். சவூதி அரேபியாவுடன் ஆக்க கரமான உறவுகளைக் கட்டிக்காக்க விரும்பிய திரு எர்துவான், இது வரை இந்த விவகாரத்தில் மௌனம் காத்து வந்தார். ஆனால் இது குறித்து இஸ்தான்புல்லில் நேற்று முன் தினம் நடந்த பேரணி ஒன்றில் அவர் உரை நிகழ்த்தினார்.

"நாம் அனைவரும் இங்கு நீதியை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இதன் மூலம் காஷோகி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முழு உண்மையும் வெளியாகும்," என்ற அவர், சவுதி யைச் சேர்ந்த 15 'ஏஜெண்டுகள்' ஏன் துருக்கிக்கு வர வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். 48 மணிநேரத்திற்குள் எந்தவொரு ஒளிவுமறைவுமின்றி தாம் முழு உண்மையையும் வெளியிடப்போவதாக அவர் கூறினார். திரு எர்துவானின் இந்த தீர்மானம் சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு கடும் நெருக்கடியை அளிக்கும் விதமாக உள்ளது.

அத்துடன், திரு எர்து வானின் இந்தப் பேச்சு மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, காஷோகி எவ் வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்த விளக்கத்தை சவூதி அளித்தே தீர வேண்டும் என பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.