கடல் மேல் 55 கிலோ மீட்டர் நீள பாலம்

கடல் மேல் 55 கிலோ மீட்டர் நீள பாலம்

1 mins read
08b14ecd-aef2-4533-ab2a-081d3f585842
-

உலகின் மிக நீளமான கடல் பாலத்தை சீன அதிபர் ஸி ஜின்பிங் நேற்று அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார். ஹாங்காங்கிலிருந்து மக்காவ் வரையிலும் மக்காவ்விலிருந்து சீனாவில் உள்ள ‌ஷுஹாய் நகரத்தையும் இணைக்கும் பாலத்தின் மொத்த நீளம் 55 கிலோ மீட்டர் (34 மைல்கள்). இருபது பில்லியன் டாலர் மதிப்புள்ள பாலத்தைக் கட்டி முடிப்பதற்கு ஒன்பது ஆண்டுகள் ஆனது. அதற்குள் 18 ஊழியர்கள் இறந்துவிட்டனர். சான் ஃபிரான்சிஸ்கோ, நியூயார்க், தோக்கியோ ஆகிய நகரங்களில் இருப்பதைப் போன்ற கடலோர வட்டாரங்களை உருவாக்கும் வகையில் 18 நகரங்களில் உள்ள 68 மில்லியன் மக்களை இந்தப் பாலம் இணைக்கிறது. படம்: ஏஎஃப்பி