பெட்டாலிங் ஜெயா: எனக்குப் பிறகு பொறுப்பு ஏற்பவர் பற்றி இப்போது உத்தரவாதம் அளிக்க முடியாது என்று மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது கூறியுள் ளார். பிரதமர் பொறுப்பை 22 ஆண்டுக் காலத்திற்கு முன்பு ஒப் படைத்ததுபோல மீண்டும் ஒப் படைப்பது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதற்குப் பதில் அளித்த பிரதமர் மகாதீர், இதற்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார். "என்னால் இப்போது உத்தர வாதம் அளிக்க முடியாது.
நான் அப்துல்லா படாவியைத் தேர்ந் தெடுத்தபோது சமய ரீதியில் அவர் நல்லவராக இருப்பார் என்று நம்பினேன். ஆனால் அவர் என்ன செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு அவருக்குப் பதில் நஜிப் பிரதமரானார். மலே சியாவின் 2வது பிரதமரான அப்துல் ரசாக் உசைனின் மகன் என்பதால் அவரும் நல்லவராக இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் என்ன நடந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்," என்று கருத்தரங்கு ஒன்றில் பேசிய டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார். மேலும் பேசிய திரு மகாதீர், தாம் பிரதமர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு அன்வர் இப்ராஹிம் பொறுப்பு ஏற்பார் என்பதை மட்டுமே உறுதியாகக் கூற முடியும் என்றார்.

