சவூதியில் முதலீட்டாளர் மாநாடு

சவூதியில் முதலீட்டாளர் மாநாடு

1 mins read

ரியாத்: இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தில் பத்திரிகையாளர் காஷோகி கொல்லப்பட்ட விவகாரம் உலகையே உலுக்கியிருக்கும் வேளையில் உலக நாடு களை ஈர்க்கும் வகையில் மூன்று நாள் முதலீட்டாளர் மாநாட்டை நேற்று சவூதி அரேபியா தொடங் கியது. இந்த முதலீட்டாளர் மாநாட்டை கொள்கை வகுப்பாளர்கள், பெரும் தொழில் அதிபர்கள் உட்பட பலர் புறக்கணித்துள்ளனர்.

பெட்ரோலிய நாடான சவூதி அரேபியாவை கவர்ச்சிமிகு முத லீட்டு நாடாக மேம்படுத்தும் நோக் கோடு மூன்று நாள் மாநாடு தொடங்கப்பட்டுள்ளது. இதில் புதிய தொழில்களும் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களும் முதலீடுகளுக்காக முன் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் உலக முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி யிருக்கும் காஷோகியின் கொலை மாநாட்டின் நோக்கத்தையே மங்கச் செய்துவிட்டது.

சவூதி அரேபியாவுடன் ஏற் கெனவே பெருமளவில் தற்காப்பு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. பெரும் வர்த்தக நிறுவனங் களான ஜேபி மார்கன் முதல் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ட் மற்றும் வாடகை வாகன சேவை வழங்கும் ஊபர் ஆகியவையும் சவூதி மாநாட்டை புறக்கணித் துள்ளன. இந்நிலையில் மாநாட்டில் உரை யாற்றுபவர்களின் பெயர் பட்டியலை ஏற்பாட்டாளர்கள் இணையத் தளத் திலிருந்து நீக்கியுள்ளனர்.